கைதி வீடியோ கால் வார்டன் சஸ்பெண்ட்

கோபி: ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த கவுரிசங்கர் (25) என்பவர் கடந்த 23.7.2024 அன்று சிறையில் இருந்து வெளிவந்த கோவை சரவணம்பட்டி காமராஜபுரத்தை சேர்ந்த கவுதம் (30) என்பவருடன் வீடியோ காலில் பேசினார். இந்த வீடியோ கால் பதிவு கடந்த 8ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காலில் பேசியவர்கள் முதன்மை தலைமை வார்டன் ராஜாராம் பணம் பெற்று கொண்டு கைதிகளுக்கு உதவி செய்வதாக கூறி இருந்ததால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் முதன்மை தலைமை வார்டன் ராஜாராமை சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்