கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை: ஐகோர்ட்டில் சிறை நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேண்டீன் மூடப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் மூடப்பட்டதாகவும், அதை திறக்க கோரி கைதி பக்ருதின் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கேண்டீன் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேண்டீன் மூடப்படவில்லை இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக சிறை நிர்வாகம் தரப்பில் வாதமிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!