சேலம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்; 5 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளன!

சேலம்: சேலம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமின் 14-ஆம் நாளை 01.08.2024, வியாழக்கிழமை அன்று 5 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி. இ.ஆ.ப.. தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” “இல்லம் தேடி சேவை” என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் தற்பொழுது ஊரகப் பகுதிகளில் அமல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்திலிருந்து இம்முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் 11.07.2024 முதல் 06.08.2024 வரை 92 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 14-ஆம் நாளான 01.08.2024, வியாழக்கிழமை அன்று கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள 5 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளன. ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சகுட்டை, நாகலூர், செம்மநத்தம், வெள்ளக்கடை மற்றும் வேலூர் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது மஞ்சகுட்டை கிரேக்மொர் துவக்கப்பள்ளி அருகில் உள்ள பெத்தானியல் ஹவுசிஸ் நடைபெறவுள்ளது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோனூர் மற்றும் வீரக்கல் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது கோனூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள MKS திருமண மண்டபத்திலும், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மியம்பட்டி, வேப்பிலை மற்றும் உம்பளிக்கம்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது பொம்மியம்பட்டி கோவிந்த கவுண்டர் மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. அதேபோன்று. கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜங்கமசமுத்திரம்.

நாகியம்பட்டி மற்றும் உலிபுரம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது நாகியம்பட்டி ஊராளி கவுண்டர் சமுதாயக் கூடத்திலும். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கத்தேரி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், வீராச்சிப்பாளையம், ஆலத்தூர் மற்றும் சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாமானது கத்தேரி சமத்துவபுரம் சமுதாயக் கூடத்திலும் நடைபெறவுள்ளது. எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்