முதல்வர் ஆய்வை விமர்சிக்கும் எடப்பாடிதான் நாடகம் நடத்துகிறார்: அமைச்சர் துரைமுருகன் பதிலடி

வேலூர்: அம்மா உணவகத்தில் திடீரென நடத்திய ஆய்வை விமர்சிக்கும் எடப்பாடி தான் நாடகம் நடத்துகிறார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்பெண்ணை ஆறு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தென்பெண்ணை ஆற்றுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.

கர்நாடக அரசு ஆணையம் அமைக்கக்கூடாது என கேட்டுகொண்டதன் அடிப்படையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகள் தீர்ப்பது நல்லது. ஆனால் பிடிவாதக்காரர்களிடம் அது முடியாத காரியம். சுமார் 50 முறை பேசியிருக்கிறோம். அதன்பிறகு ஆணையம் அமைக்க கேட்டோம்.

அம்மா உணவகத்தில் முதல்வர் நடத்திய திடீர் ஆய்வை நாடகம் என எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். எடப்பாடிதான் நாடகம் நடத்துவார். அவர்களது கட்சியில் மட்டும்தான் நாடகங்கள் நடக்கும். அறநிலையத்துறை இடத்தில் கடந்த ஆட்சியில் ரூ.198 கோடி கனிம வள கொள்ளை நடந்துள்ளது. கனிம வளக்கொள்ளை என்பது கடந்த ஆட்சியில் நடந்துள்ளது. அது தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருப்பது வரவேற்கதக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரகம் ரகமாக மின்னும் ராக்கிகள் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்!

சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!!

குழந்தையின் மொட்டைக்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கிறதா?