10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

விழுப்புரம்: 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரெட்டணையில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேருக்கு பள்ளி முதல்வர் கார்த்திகேயன் என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவர் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று தவறான இடத்தில் தொடுதல் மற்றும் தனது கை, கால்களை பிடித்து விடுமாறு கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் தொடர்ந்து பள்ளி முதல்வர் தொல்லை கொடுத்ததால் மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்ககாததால் கடந்த 14ம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் போலீசார் அடைத்தனர். கார்த்திகேயனின் தந்தை சண்முகம் பள்ளியின் தாளாளராக உள்ளார். கார்த்திகேயன் வெளிநாட்டில் டாக்டர் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வந்து பள்ளி முதல்வராக செயல்பட்டு வந்ததும், அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது எம்பியானவர் பங்குதாரராக உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துஉள்ளது.

Related posts

4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு

லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு