பிரதமர் மோடி நாளை லாவோஸ் பயணம்

புதுடெல்லி: தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் தற்போது ஆசியான் அமைப்பின் தலைவராக உள்ளது. 21வது ஆசியா – இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19வது கிழக்காசியா உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு லாவோஸ் பிரதமர் சோனேக்சோ சியான்டோன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் லாவோஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த மாநாடுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பின்னர் லாவோஸ் பிரதமர் சோனாக்சே சியான்டோனுடன் இருநாடுகளின் நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related posts

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

வளி மண்டல சுழற்சி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு