பிரதமர் மோடி நாடாளுமன்றம் வராதது ஏன்?: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்.. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்துக்கு இடையே மக்களவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் முன்வைத்துள்ள முழக்கங்களுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி நாடாளுமன்றம் வராதது ஏன்?

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் நாளிலும் பிரதமர் மோடி நாடாளுமன்றம் வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றம் வராததற்கு கண்டனம் தெரிவித்தும் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு:

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகளின் நடத்தை வருத்தம் அளிக்கிறது என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார். பிரதமர் அவைக்கு வர வேண்டும் என மக்களவையிலும் எதிர்க்கட்சியினர் மீண்டும் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்