அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்!

டெல்லி: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா சென்றார். அந்த பயணத்தின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிலடெல்பியாவுக்கு நேற்று முன் தினம் சென்றடைந்தார்.

அதே சமயம் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதனுடன், பிரதமர் மோடி தனது பயணத்தின் போது சில முக்கிய இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டுள்ளார்.

 

Related posts

முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்; ஆனால், அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்கள் : உயர்நீதிமன்றம் கருத்து

பழனி பஞ்சாமிர்தம் பற்றி வதந்தி: பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது வழக்கு

குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!!