ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்வு

மாட்ரிட்: பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்த சர்ச்சைகளுக்கு இடையே ஸ்பெயினின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் ஜூனில் நடந்த தேர்தலில் மத்திய வலது பாப்புலர் கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் மூன்றாவது இடத்தை பிடித்த தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அரசு அமைப்பதற்கான ஆதரவை பெற முடியவில்லை. இந்நிலையில் பொறுப்பு பிரதமராக இருந்த பெட்ரோ சான்செஸின் சோசலிச கட்சியானது 121 இடங்களை பிடித்து இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவை பெறவேண்டி இருந்தது. இந்நிலையில் 2 நாட்கள் விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 350 உறுப்பினர்கள் கொண்ட கீழவையில் 179 பேர் பெட்ரோ சான்செஸ்சுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வலது சாரி எதிர்கட்சிகள் மட்டும் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்