பிரதமர் வருகை எதிரொலி: கடலுக்கு செல்ல தடை விதிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு என மீனவர்கள் வேதனை..!!

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு இன்று பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 வெடிகுண்டு சோதனை குழுக்கள், 8 மோப்ப நாய்கள் மற்றும் கடலோர காவல்படை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுப்பட்டினம், உய்யாழிக்குப்பம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்களுக்கு நேற்று மாலை 3 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை தடை விதிக்கப்பட்டிருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கல்பாக்கம் மற்றும் புதுப்பட்டினம் பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கடலுக்கு செல்ல தடை விதிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு என மீனவர்கள் வேதனை கூறுகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது