நாட்டின் பணவீக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி

டெல்லி: இக்கட்டான காலத்திலும், உலகளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நேரத்திலும், உள்நாட்டின் பணவீக்கம் உலக சராசரியை விகிதத்தை விட 2 புள்ளி சதவிகிதம் குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துளளார். நிகழ்வு ஆண்டில் நாட்டின் பணவீக்கம் சற்றே குறைந்து வந்தாலும், திருப்தியளிக்கிற போக்கு காணப்படவில்லை.கடந்த ஜுலை மாதம், நாட்டின் சில்லறை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2-5 % பணவீக்க வரம்பைவிட அதிகரித்தது. காய்கறிக விலை உயர்வால் , 15 மாத காலம் இல்லாத அளவு 7.44% ஆக அதிகரித்தது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இக்கட்டான காலத்திலும், உலகளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நேரத்திலும், நாட்டின் பணவீக்கம் உலக சராசரியை விகிதத்தை விட 2 புள்ளி சதவிகிதம் குறைவாக உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வாழ்வை எளிதாக்கும் மக்கள் சார்ந்த முடிவுகளில் தெடர்ந்து எடுத்து வருகிறோம். சமீபத்திய உதாரணமாக, ரக்ஷாபந்தன் போது அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கும் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டோம் என மோடி தெரிவித்தார்.

உணவு பொருட்களின் விலை அழுத்தம் சில காலம் தான் இருக்கும் என நித அமைச்சகம் தனது ஆகஸ்ட் மாத அறிக்கையில் குறிப்பிட்டது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியும், அரசும் பணவீக்க உயர்வைக் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தது. உள்நாட்டு நுகர்வும், முதலீட்டுத் தேவைகளும் நாட்டின் வளர்ச்சியை அதிகரித்தாலும், பிராந்திய மற்றும் உலகளாவிய நிச்சயற்றத்தன்மை, உள்நாட்டில் காணப்படும் நிலையற்றத் தன்மை ஆகியவை எதிர்வரும் மாதங்களில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த செவ்வாயன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதுகுறித்து கூறுகையில், நாட்டின் பணக் கொள்கை முன்னோக்கி நகரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பிம்பக் கண்ணாடியில் மட்டும் பார்த்து கொள்கை வடிவமைத்தால் அதில் விபத்தில் தான் முடியும். சரியான நகர்வு தேவைப்படுகிறது. விலை ஸ்திரத்தன்மையை பணவியல் கொள்கை குழு தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். நாட்டின் விநியோகத்தை அதிகரிப்பது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் தலையீடுகளும் இதில் முக்கியம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி