பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தற்காலிக சாகர் மித்ரா பணியாளர்கள் நியமனத்துக்கு வருகிற 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள கடலோர மீனவ, வருவாய் கிராமங்களுக்கு தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளர்கள் (சாகர் மித்ரா) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இல்லாத பட்சத்தில் இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், தாவரவியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பட்டப்படிப்புடன் தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

31.1.2023 அன்றைய தேதியின்படி வயது 35க்குள் இருக்க வேண்டும் மற்றும் நன்கு தமிழ் தெரிந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாதாந்திர ஊக்க ஊதியம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் வருகிற 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, ‘மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.77, சூரிய நாராயணா செட்டி தெரு, ராயபுரம், சென்னை-13’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 9384824245, 9384824407 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு