பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஜார்க்கண்ட் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்

ராஞ்சி: பழங்குடியின தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி ஜார்கண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்காவிற்கு பிரதமரின் கான்வாய் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெண் ஒருவர் பிரதமரின் கார் செல்லும் சாலையின் குறுக்கே வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக பிடித்தனர். காவலில் எடுத்து விசாரித்ததில் அந்த பெண்ணின் பெயர் ஜார்கண்ட்டை சேர்ந்த சங்கீதா ஜா என்பது தெரியவந்தது. மேலும் கணவருடன் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால், அவரது கணவரின் சம்பளத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைக்க விரும்பியுள்ளார். பிரதமர் ராஞ்சி வருவதை அறிந்து அவரிடம் முறையிடுவதற்காக அங்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமரின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது