இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனியதாக இருந்தது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் ஒன்றிய – தமிழ்நாடு அரசு பங்களிப்புடன் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2020-ல் ஒன்றிய அமைச்சரே அடிக்கல் நாட்டி வைத்தும் இதுவரை நிதி வழங்கவில்லை. சமக்ர சிக்ஷா திட்டத்தில் முதல் தவணை நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையைவிட சிறந்த கல்வி திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததை சுட்டிக் காட்டி ஒன்றிய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கான சமக்ர சிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கோரிய மனுவையும் முதலமைச்சர் அளித்தார். இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு அளித்தேன். இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததை சுட்டிக் காட்டி ஒன்றிய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது. முதல்வர்களுக்கு 15 நிமிடம்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவார்கள், எனக்கு 40 நிமிடம் ஒதுக்கினார். கச்சத் தீவை திமுக தாரை வார்த்ததாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம். செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெறுவார். காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.

 

Related posts

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி

தொழில்முனைவோர் மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்