பிராடிஸ்லா: சுலோவேகியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ. இவர் கடந்த 15ம் தேதி கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை தேறியதை அடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தே தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.