கல்வி உள்ளிட்ட துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது :காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி : கல்வித்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது என்று காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,”கே.காமராஜரின் பிறந்தநாளில் நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவம், ஏழைகளை மேம்படுத்துவதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்காக பரவலாக மதிக்கப்படுகிறார்.கல்வி உள்ளிட்ட துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவருடைய இலட்சியங்களை நிறைவேற்றி, நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என பதிவிட்டுள்ளார்.

Related posts

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

கிறிஸ்தவ மிஷனரியுடன் ஆங்கிலேய அரசு சேர்ந்து பாரத அடையாளத்தை அழிக்க முயற்சி என ஆளுநர் ரவி பேசியது கண்டிக்கத்தக்கது :தமிழக ஆயர் பேரவை

அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை