இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்று முடிவு: உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு


மும்பை: மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வெற்றியால் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உற்சாகம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,’ மத்தியில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் இந்தியா கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளது. சந்திரபாபுநாயுடு மற்றும் நிதிஷ்குமார் இருவரும் இப்போது பாஜவுடன் இருந்தாலும், முன்பு பா.ஜவால் பாதிக்கப்பட்டவர்கள். இப்போது அவர்கள் முக்கிய தலைவர்களாக மாறி உள்ளனர். சாதாரண மக்கள் தங்கள் சக்தியைக் காட்டி இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். எனவே அடுத்த அரசாங்கத்தை அமைக்க உரிமை கோர வேண்டிய அவசியம் உள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும். இதற்காக நான் டெல்லி செல்கிறேன்’ என்றார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி