பிரதமருக்கு எதிராக வன்முறையை துாண்டி விடுகிறார் ராகுல் காந்தி: பாஜ புகார்

புதுடெல்லி: பாஜ தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா டிவிட்டரில் பதிவிடுகையில், ராகுல் காந்தி மோடிக்கு எதிரான வன்முறையை அடிக்கடி ஊக்குவித்து அதை நியாயப்படுத்தியுள்ளார்.பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியின் போது மோடி அங்கு சென்றார். அப்போது பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் வெகு நேரம் நிறுத்தப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் பஞ்சாப் போலீசார் சமரசம் ஏற்படுத்தியதை மறக்க முடியுமா?

கடந்த காலங்களில் மோடியை சர்வாதிகாரி என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியினர் டிரம்ப்பை அதே போல் விமர்சித்து வந்தனர். டிரம்பால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என ஜோ பைடன் விமர்சித்தார். மோடியால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சி பற்றி அவரது கட்சியினர் கூறுகையில், டிரம்பின் அரசியல் போட்டியாளர்கள் டிரம்புக்கு எதிரான வெறுப்பு மன நிலையை உருவாக்கி விட்டனர். பல நாடுகளில் இடது சாரிகள் மீண்டும் செல்வாக்கு பெற்று வருவது போன்று இந்தியாவில் எதுவும் நடக்கவில்லை. மோடி 3 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளார். இனத்தின் அடிப்படையில் அமெரிக்கர்களை பிரிப்பது போல் இந்தியாவில் ஜாதி என்ற கருவியை பயன்படுத்தி சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி நடந்தது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை