அடுத்த மாதம் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

டெல்லி: டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு வர உள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த பாதயாத்திரையின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இந்து மத கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: பாஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சரவை குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு

ஹத்ராஸ் பலி 121 ஆக அதிகரிப்பு; சாமியார் போலே பாபாவை தப்ப வைக்க உ.பி அரசு முயற்சி?: எப்ஐஆரில் பெயர் சேர்க்காததால் சர்ச்சை