பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: ராணுவம் அறிவிப்பு

வங்கதேசம்: மாணவர்கள் போராட்டத்துக்கு பணிந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மாணவர் அமைப்பு கெடு விதித்திருந்தது. மாணவர்கள் அமைப்பு கெடு விதித்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ராணுவத் தளபதி அறிவித்த இடைக்கால அரசை விரைந்து அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கைதி துன்புறுத்தல் விவகாரம்: நிலை அறிக்கை தயாரிப்பு

பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் :அமித்ஷா

திருச்சி: பைக்கில் சாகசம் செய்தவர் கைது