பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுசூழல் செயற்பாட்டாளர் கைது!!

தூத்துக்குடி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாலா பயணமாக இன்று தமிழ்நாடு வருவதையொட்டி தூத்துக்குடியில் 2 நாளைக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி நாளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். துறைமுக விரிவாக்க பணிகள், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், முடிவுற்ற திட்ட பணிகளை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி இன்றும், நாளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீனவர்கள் அந்நிய ஊடுருவல் குறித்த தகவலை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சுற்றுசூழல் செயற்பாட்டாளர் முகிலன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தனது வீட்டில் இருந்த அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக அவர் முழக்கமிட்டார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் மாவட்டம் முழுவதிலும் ட்ரோன் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி