தொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை உயர்கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகாது: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகளும், 9 தனியார் சட்டக் கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், 11 தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க தடை விதிக்கவும், சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆறு வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை. உயர் கல்வி அடிப்படை உரிமை அல்ல எனத் தெரிவித்து விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்