பட்டப்பகலில் சாலையில் கோயில் பூசாரியுடன் மல்லுக்கட்டிய ஜிபி முத்து

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் சமூக வலைதள பிரபலமும், நடிகருமான ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோயிலாகும்.

இந்த கோயிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் நாள் இந்த கோயிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி.பி.முத்து வெளியூர் செல்லாத நேரங்களில் பூஜையில் கலந்து கொள்வாராம். அதே போல் இந்த கோயிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோயிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து, இந்த கோவிலுக்கு இனி நீ பூஜை வைக்கக்கூடாது என்று மகேஷிடம் கூறியதாக தெரிகிறது.

அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும், ஜி.பி.முத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீதிக்கு வந்த ஜி.பி.முத்து வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related posts

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

கடன் தொல்லையால் சோகம் 3 குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி: 4 வயது சிறுவன் பரிதாப பலி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு