வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூக்களின் விலை உயர்வு

சென்னை: வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. வெங்காயம் மற்றும் தக்காளி விலை மட்டும் குறைவாக இருந்தது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் 630 வாகனங்களில் 6,500 டன் காய்கறிகள் வந்துள்ளன. நேற்று முன்தினம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று ரூ.40க்கு விற்கப்பட்டது. தக்காளி ரூ.40லிருந்து ரூ.25க்கும், சின்ன வெங்காயம் ரூ.120லிருந்து ரூ.90க்கும் விற்கப்பட்டன.

இதேபோல் முருங்கைக்காய் ரூ.130, இஞ்சி ரூ.90, கோவைக்காய், வண்ண குடமிளகாய் ரூ.80, கொத்தவரங்காய், பட்டாணி ரூ.60, வெண்டைக்காய், கத்திரிக்காய், காராமணி, குடைமிளகாய், பீன்ஸ், எலுமிச்சைபழம் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.45, பீட்ரூட், சேனைகிழங்கு, பச்சை மிளகாய், அவரைக்காய், பாகற்காய் ரூ.40, கேரட், சுரக்காய், முள்ளங்கி ரூ.35, உருளைக் கிழங்கு, நூக்கள், புடலங்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.13, சவ்சவ் ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கடப்பா, திண்டுக்கல் ஒசூர், மதுரை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து அனைத்து பூக்களும் வருகின்றன. இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,000க்கும், மல்லி ரூ.1,800க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.1,000க்கும், சம்பங்கி மற்றும் அரளிப் பூ ரூ.250க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120க்கும், சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு