கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு ஒரு கிலோ மல்லி ரூ.900

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் லாரிகளில் வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நாளை என்பதால் பூ மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
அந்த வகையில், ஒரு கிலோ மல்லி ரூ.900, கனகாம்பரம் ரூ.700, ஐஸ் மல்லி ரூ.600, ஜாதிமல்லி, முல்லை ரூ.400, சாமந்தி ரூ.40, சம்பங்கி ரூ.60, பன்னீர் ரோஸ் ரூ.50, சாக்லேட் ரோஸ், அரளி பூ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து வகை பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்தாலும், பூக்களை வாங்கும் மக்கள் கூட்டம் குறையவில்லை” என்றார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு