ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ மல்லி ரூ.2,300

சென்னை: ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி பூக்கள் வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர். இதனால், அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.2,300, ஐஸ் மல்லி ரூ.1,800, முல்லை மற்றும் கனகாம்பரம் ரூ.1,200, ஜாதிமல்லி ரூ.900, அரளி பூ ரூ.350, சாமந்தி ரூ.100, சம்பங்கி ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.140, சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்தது. விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் குவிந்தனர். இதனால் வியாபாரம் களைகட்டியுள்ளது. ஊட்டி ரோஸ் பஞ்ச் ரூ.250ல் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு