சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

சென்னையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க விலைகளின் தேவை குறைவாகவும் உள்ளது. அதேபோல், கிராமப்புற மக்களிடையே வெள்ளியின் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதால் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை