விலைவாசி உயர்வு; ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது: முத்தரசன்

சென்னை: ஒன்றிய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் உணவு, தானியங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வர்த்தக சூதாட்டத்தை ஆதரித்து வரும் ஒன்றிய அரசின் கொள்கையால் விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Related posts

நீதிமன்றத்தில் தூய்மை பணி: நீதிபதி, வக்கீல்கள் பங்கேற்பு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பரங்கிபேட்டை சர்வேயர் நிர்மலா கைது

அக்.15, 16-ல் பாகிஸ்தான் செல்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்..!!