அதில் கூறியிருப்பதாவது:
பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021-22 நிதியாண்டில் வரிக்கு முந்தைய இழப்பாக ₹8,370 கோடி இழப்பை சந்தித்துள்ளது. வரிக்கு முந்தைய வருவாயாக ₹6,679 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டில் இந்த நிறுவனம் ₹4,143 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இழப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதுமட்டுமின்றி, சமீபத்தில் பிளாக் ராக் நிறுவனம் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹1,80,400 கோடியில் இருந்து ₹8,200 கோடியாக குறைந்தது .