போராட்டத்துக்கு இடையே பிரஸ்மீட் அவசியமா? நடிகர் சித்தார்த்தை கண்டித்து கன்னட அமைப்பினர் கோஷம்

பெங்களூரு: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் சித்தார்த்தின் பிரஸ்மீட்டுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த் நடித்த ’சிக்கு’ (தமிழில் நேற்று வெளியான ‘சித்தா’ என்ற படம்) என்ற கன்னடப் படம் நேற்று திரைக்கு வந்தது.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் அப்படம் தொடர்பாக சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த கன்னட அமைப்பினர் சிலர், ‘காவிரி விவகாரத்துக்கு இடையே இதுபோன்ற நிகழ்ச்சி அவசியமா?’ என்று கேள்வி எழுப்பினர். அவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அசராமல், மேடையிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தார் சித்தார்த். எனினும், கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், சித்தார்த் எழுந்து நின்று செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை