5 நீதிபதிகளை நிரந்தரமாக்கி குடியரசுத் தலைவர் ஆணை

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 5 பேரையும் ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி சமிம் அகமது சென்னைக்கு மாற்றப்பட்டதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது.

 

 

Related posts

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உட்பட15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தங்கம் விலையில் மாற்றம் சவரன் மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது