மீண்டும் நேரடி விவாதத்துக்கு தயாரா?: அதிபர் பைடனுக்கு டிரம்ப் சவால்

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோபைடனை மீண்டும் ஒரு விவாதத்துக்கு தயாரா என்று சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த 27ம் தேதி அட்லாண்டாவில் டொனால்ட் டிரம்புடன் நடந்த நேரடி விவாத நிகழ்ச்சியில் அதிபர் பைடன் சிறப்பாக பங்களிக்கவில்லை. இதனால் டிரம்ப் உற்சாகமடைந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் மற்றொரு நேரடி விவாதத்துக்கு தயாரா என்று டிரம்ப் சவால் விடுத்துள்ளார். ப்ளோரிடாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்த ஒட்டுமொத்த உலகத்தின் முன்பும் ஜோ பைடன் தன்னை மீண்டும் நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறேன். இந்த வாரம் மற்றொரு விவாதத்தை நடத்துவோம். அதனால் தூக்கத்தில் இருக்கும் ஜோ பைடன் அதிபராக இருப்பதற்கு என்ன தேவையா அது அவரிடம் உள்ளது என்று நிரூபிக்கட்டும். 18-ஹோல் கோல்ப் விளையாட்டுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். அவர் வெற்றி பெற்றால் அவர் விருப்பப்படி நான் செய்வேன். ஆனால் அவர் அந்த வாய்ப்பை எடுக்க மாட்டார் என்று நான் பந்தயம் கட்டுவேன். உண்மையில் பைடன் பேசுவது மட்டும் தான் எந்த செயலும் இல்லை என்பதை அது நிரூபிக்கும்” என்றார். ஆனால் அதிபர் பைடனின் பிரசார குழு இந்த இரண்டு சவால்களையும் நிராகரித்துள்ளது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு