வாக்னர் தலைவர் இறுதி சடங்கில் அதிபர் புடின் பங்கேற்பா?

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் அதிபர் புடின் அரசுக்கு எதிராக ஓரிரு மாதங்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் கடந்த புதனன்று விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறைந்த வாக்னர் படை தலைவரின் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதில் அதிபர் புடின் பங்கேற்பது தொடர்பாக இருவேறு கருத்துக்கள் பரவி வந்தன.

இது குறித்து ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘‘விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறுத சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிபர் புடின் திட்டமிடவில்லை ” என்றார். இறுதி சடங்கு எங்கே நடக்கிறது, எப்போது நடக்கிறது என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் வாக்னர் பிரிகோஜின் சொந்த நகரமான பீட்டர்ஸ்பர்க்கில் இறுதி சடங்கு நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை

யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து