தொடரும் விபத்துகள்.. தூக்க நிலையில் இருந்து ரயில்வே துறை எப்போது விழிக்கும்: ஜனாதிபதி, கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் இரங்கல்!!

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காகுளம் மாவட்டம் பலாசாவுக்கு செல்லும் பயணிகள் ரயில்(எண்-08532) நேற்று இரவு 7.10 மணி அளவில் விஜயநகரம் மாவட்டம் கொத்தவலசா மண்டலம் கண்டகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்றிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகட்டாவுக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில்(எண்-08504) நின்றிருந்த பலாசா பயணிகள் ரயிலின் பின்பக்கம் மோதியது. இதில் விரைவு ரயிலின் 4 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.விபத்தில் ரயிலை இயக்கிய லோகோ பைலட் ராவ், ரயில் உதவி லோகோ பைலட் சீரஞ்சீவி, ரயில்வே காவலர் ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர்.

அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு : ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : ரயில் விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி : விஜயநகரம் மாவட்டத்தில் துயரத்தை தரக்கூடிய மற்றொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.தூக்க நிலையில் இருந்து ரயில்வே துறை எப்போது விழிக்கும். ரயில் மீது ரயில் மோதுவது, ரயில் பெட்டிகள் தடம் புரள்வது, பயணிகள் சிக்கிக் கொள்வது தொடர்கிறது.மிக விரைவான மீட்புப் பணி மற்றும் ரயில் விபத்து குறித்த விசாரணை தேவை.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் : எதிர்காலத்தில் இது போன்ற ரயில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை தேவை.ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில் அமைச்சகம் முன்னுரிமை அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பாராட்டு

பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல்

திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்