கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

*அமைச்சர் அறிவுரை

பாலக்காடு : கேரளமாநிலம் அட்டப்பாடி முக்காலி பகுதியில் எம்.ஆர்.எஸ்., கலையரங்கில் அட்டப்பாடியின் மேம்பாட்டுத்திட்டக் கூட்டத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: அட்டப்பாடியில் பசி, பட்டினி காரணமாக ஏராளமான குழந்தையினர்,கர்ப்பிணியினர் மற்றும் முதியோர் மரணமடைந்து வருகின்றனர்.

இவர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும். ஊட்டசத்துக்குறைவு மூலமாக ஏராளமான குழந்தைகள் இறப்பு ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து சுகாதாரத்துறையினர் உன்னிப்புடன் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மருத்து மாத்திரைகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அட்டப்பாடி மலைவாழ் மக்களின் பிரச்னைக்கு ஒரளவு தீர்வு காணமுடியும். தற்போது 500 பீட் பாரஸ்ட் அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளிலிருந்து நியமனம் மாநில அரசு செய்துள்ளது. 250 பேருக்கு செவிலியர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார். என மாநில அரசு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இவ்விழாவிற்கு எம்.எல்.ஏ., ஷம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் தர்மலஸ்ரீ, பிளாக் பஞ்சாயத்து தலைவர் மருதிமுருகன், ஜோதி அனில்குமார், ராமமூர்த்தி, பஞ்சாயத்து உறுப்பினர் முகமது பஷீர், சனோஜ், சிந்து பாபு, ராஜன், கந்தசாமி, துணைத் திட்ட அதிகாரி சாதிக்கலி, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு