காந்தி ஜெயந்தியில் அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!!

பாட்னா : தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியான இன்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சிக்கு ‘ ஜன் சுராஜ்’ என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ள இவர், வரும் தேர்தலில் பீகாரில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும், ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வேன்; மதுக்கடைகளை திறப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

பீகார் மக்களுக்கு மாற்று அரசியலை அளிக்கப்போவதாகவும்,. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. என்றும் கூறினார்.

Related posts

கம்பம் அருகே மகாத்மா காந்திக்கு ஆலயம் அமைத்து வழிபடும் மக்கள்

நாளை மறுதினம் பிரம்மோற்சவம் தொடக்கம் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த ‘லொகேஷன் க்யூஆர்கோடு’

4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு