பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி.. டி.ஆர்.டி.ஓ. ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் தகவல்

புபனேஸ்வர்: பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக 500 கிலோ முதல் 1,000 கிலோ எடை உடைய ஆயுதங்களை சுமந்து செல்லும் பிரளய் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும், ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் தயாரித்திருக்கிறது. தற்போது இந்நிறுவனம் குறைந்த துார இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு ‘பிரளய்’ என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணை நேற்று ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பிரளய் ஏவுகணை தரையிலிருந்து, தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. இலக்கை துல்லியமாக தாக்கி, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. ஏவுகணை சென்ற பாதையை சாதனங்கள் துல்லியமாக கண்காணித்தன. திட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்தது.

சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பு தேவையை கருத்தில்கொண்டு ‘பிரளய்’ ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா இடையிலான அசல் எல்லைக்கோட்டு பகுதியிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார். இந்தியாவின் பிரளய் ஏவுகணை, சீன ராணுவத்தின் வசம் இருக்கும், ‘டாங் பெங் 12’ மற்றும் தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தி வரும், ‘ஸ்கான்டர்’ ஏவுகணை ஆகியவற்றுக்கு இணையானது.

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி