சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய மின் தேவையை கணக்கிட செயற்கை நுண்ணறிவு: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்களின் ஒரு சிறிய குழு, செயற்கை நுண்ணறிவு மூலம் மின் தேவையை கணித்து தினசரி அறிக்கைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே இந்த திட்டம் ஆந்திராவில் நடைமுறையில் உள்ளது. மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் 24மணி நேரமும் மின் தேவையை கண்காணிக்கும், இதுவரை மின் பகிர்ந்தளிப்பு மைய பணியாளர்கள் காலநிலை மற்றும் மின் நுகர்வு செய்யப்படும் அடிப்படையில் பல ஆண்டுகளாக கணக்கிடப்பட்ட அனைத்து தரவுகளையும் வைத்து மின் தேவையை கண்டறிந்தனர். இருப்பினும், மின் வாரிய தலைவர் வழிகாட்டுதலின் படி ஒரு சிறிய குழு உருவாக்கப்பட்டு மின் தேவை தானியங்கி முறையில் கண்டறிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம் மற்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள வானிலை ஆய்வு மையங்களில் இருந்து கடந்த 3 ஆண்டுகளின் வார காலநிலை தகவல்களை பெறப்பட்டது.

இந்த தகவல்கள் மற்றும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் உள்ள தரவுகளை ஆகியவற்றை வைத்து தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த மென்பொருள் மற்றும் மின் பகிர்ந்தளிப்பு மைய பணியாளர்கள் மூலம் கிடைக்கும் தரவுகளுடன் மின் நுகர்வை ஒப்பிடும் போது அதில் சில மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மின் பகிர்ந்தளிப்பு மைய பணியாளர்களின் தரவுகளில் 3-4 சதவீதமும், மென்பொருள் மூலம் கிடைத்த தரவுகளில் 5-7 சதவீதமும் வித்தியாசம் இருந்தது. ஆனால் இதையும் வரும் நாட்களில் சரி செய்தால் இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் தானியங்கியாக கிடைக்கும் தரவுகள் தினசரி மின் தேவையை கணிப்பதில் பெரும் பங்காற்றும். இது தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதோடு மட்டும் அல்லாமல் எதிர்காலத்தில் மின் கொள்முதலை நிர்ணயிக்கவும் உதவும்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!