பௌர்ணமி கிரிவலத்தையொட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு MEMU ரயில் இயக்கம்

சென்னை: பௌர்ணமி கிரிவலம் நிகழ்வை ஒட்டி தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே ரயில் நாளை காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.30க்கு தாம்பரம் வந்தடையும்.

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற காசிக்கு நிகரான தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலம் போன்ற பல்வேறு சிறப்புகளை பெற்று அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு மலையே சிவனாக அமைந்துள்ள திருவண்ணாமலையை வலம் வந்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள திருவண்ணாமலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் தனிச்சிறப்பு. அந்த வகையில் ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் நாளை ஜூன் 21ஆம் தேதி காலை 7:46 மணிக்கு துவங்கி மறுநாள் காலை சனிக்கிழமை ஜூன் 22ஆம் தேதி காலை 7 21 மணிக்கு முடிவடைகிறது. பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது

இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை பக்தர்களின் வசதிக்காக தாம்பரம் மற்றும் திருவண்ணாமலை இடையே கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரயில் எண். 06127 தாம்பரம் – திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜூன் 21, 2024 இன்று மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் (1 சேவை) 5 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

ரயில் எண். 06128 திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து ஜூன் 22, 2024 அன்று (சனிக்கிழமை) காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் (1 சேவை) 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோயிலூர், வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.

அதேபோல் பவுர்ணமி மற்றும் வார இறுதி நாளை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதலாக 600 பேருந்துகளும், நாளை 410 பேருந்துகளும் இயக்கபடுகிறது.

 

Related posts

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு