மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வருகிறது. அதேபோன்று செங்கல்பட்டு நகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்துள்ள மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்ஷயா நகர் அடுத்துள்ள லேக் வியூ அவென்யூ என்ற பகுதியில் முறையாக சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது. சாலை, தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக சேறும் சகதியமாக காட்சியளிக்கிறது. உடனடியாக, இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்