உருளைக் கிழங்கு செல்லக்குட்டி!

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நொதிகளால் நிரம்பிய உருளைக்கிழங்கு, நிறமியை எதிர்த்துப் போராடுவது மற்றும் சருமத்தை வெண்மையாக்குவது உட்பட பல சரும நன்மைகளை வழங்குகிறது. சருமத்தின் சில பகுதிகள் அதிகப்படியான மெலனினை உற்பத்தி செய்யும்போது, அவ்விடத்தில் கருந்திட்டுகள், அல்லது புள்ளிகள் ஏற்படலாம். சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றங்கள், முதுமை, முகப்பரு தழும்புகள் அல்லது வீக்கம் போன்ற பல்வேறு காரணிகளால் கரும்புள்ளிகள் அல்லது திட்டுகள் முகத்தில் தோன்றலாம். இயற்கை வைத்தியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் புரிந்து கொள்வது நிறமி மற்றும் கரும்புள்ளிகளை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தோல் நிறமிக்கு சிகிச்சையளிக்க உருளைக்கிழங்கை எவ்வாறு பயன்படுத்தலாம் இதோ!

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கை தோலுரித்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். அதை சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை ஒரு பிளெண்டரில் போட்டு, மென்மையான தன்மையைப் பெறும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். மெல்லிய துணி அல்லது வடிகட்டியை பயன்படுத்தி உருளைக்கிழங்கு சாற்றை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அந்தச் சாற்றை முகத்தில் தடவவும். அல்லது உங்கள் சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஒரு பருத்தி உருண்டையைப் பயன்படுத்தி தடவவும். 15-20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரத்தின் மூன்று – நான்கு முறை இதைச் செய்ய முகத்தின் கருந்திட்டுகள், புள்ளிகள் மறையும்.

உருளைக்கிழங்குத் துண்டுகள்

உருளைக்கிழங்கை மெல்லிய வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை உங்கள் சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிமிடங்கள்
மெதுவாக தேய்க்கவும்.அந்த சாறு உங்கள் சருமத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். சில வாரங்களுக்கு இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட செய்யுங்கள்.உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை மாஸ்க்ஒரு உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.இந்த பேஸ் பேக்கை முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துங்கள். 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தவும். பிரகாசமான முகம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு மற்றும் தேன் பேக்

வேகவைத்த உருளைக்கிழங்கை மிருதுவான பேஸ்ட் ஆகும் வரை மசித்துக் கொள்ள வேண்டும். மசித்த உருளைக்கிழங்குடன் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைத் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் நிறமி உள்ள பகுதி களில் தடவ வேண்டும். பிறகு, 20-30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். நல்ல பலனை பெற வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேக்கை பயன்படுத்த வேண்டும்.இதையெல்லாம் செய்து பாருங்கள் உங்கள் முகம் மின்னும்.
– கவிதா
பாலாஜி கணேஷ்

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது