மீண்டும் பதவி வழங்கப்படும் என்ற அண்ணாமலையின் அறிவிப்பை நிராகரித்தார் திருச்சி சூர்யா சிவா: அதிமுகவில் இணைய போவதாக திடீர் அறிவிப்பு?

சென்னை: பாஜகவில் மீண்டும் பதவி வழங்கப்படும் என்று அறிவித்த அண்ணாமலையின் அறிவிப்பை திருச்சி சூர்யா சிவா நிராகரித்தார். அவர் அதிமுகவில் இணைய போவதாக திடீரென அறிவித்துள்ளார். தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண், ஓ.பி.சி.அணி தலைவர் திருச்சி சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று கடந்த ஆண்டு பொதுவெளியில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொலைபேசியில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து இருந்தார் திருச்சி சூர்யா சிவா. இந்த ஆடியோ அப்போது வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில், சூர்யா சிவாவின் வேண்டுக்கோளுக்கிணங்க, அவர் தாம் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார். ஆனால், அண்ணாமலையின் அறிவிப்பை சூர்யா சிவா நிராகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர் திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைவேன். அதிமுகவில் இணைவது உறுதி என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது