2060-ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்: ஐநா

நியூயார்க்: 2060-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 170 கோடி என்ற உச்சத்தை தொடும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம் ஆண்டில் 170 கோடி என்ற உச்சத்தைத் தொடும் இந்திய மக்கள் தொகை, அதன்பின் படிப்படியாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2060-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய மக்கள் தொகை 12% வரை குறைந்து 2100-ல் 150 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!