ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றியவர் காமராஜர்: தலைவர்கள் புகழாரம்

சென்னை: காமராஜின் 121வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள், அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று காலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை, ஆழ்வார்பேட்டை, அசோகா சாலையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் காமராஜரின் உருவப்படத்துக்கு ஜி.கே.வாசன் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இதே போல பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம்:
திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் சமூக மாற்றத்திற்கான அறிவாயுதத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் வழங்கிட உறுதி கொள்வோம்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையினைதெரிவித்து கொள்கிறேன்.
ராமதாஸ் (பாமக): காமராஜர் கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகிய துறைகளிலும் எண்ணிலடங்காத திட்டங்களை செயல்படுத்திய விருதுப்பட்டி வீரர்.
கமல்ஹாசன் (மநீம): இந்தியாவிற்கே ஒரு புதிய வழிகாட்டியாக ஆனவர் காமராஜர். இன்றைய தலைமுறைக்கு அவரை கொண்டு சேர்ப்பது நம் கடமை. மேலும், பாமக தலைவர் அன்புமணி உள்பட பல கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா