பொன்னமராவதி பகுதியில் கோலாகலமாக நடந்த மீன்பிடி திருவிழா: விரால், கெண்டை, கெளுத்தி மீன்கள் அதிகளவில் சிக்கின

பொன்னமராவதி: பொன்னமராவதி பகுதியில் மீன்பிடி திருவிழா களை கட்டிட துவங்கியது. தூத்தூர் ஊராட்சியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் குவிந்தனர். விரால், கெண்டை, கெளுத்தி வகை மீன்கள் அதிகம் சிக்கியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். பொன்னமராவதி பகுதியில் மீன் பிடித்திருவிழாக்களில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கின்றது. அதே போல மீன்பிடித்திருவிழாக்கல் நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கின்றது.பொன்னமராவதி பகுதியில் ஒரு சில இடங்களில் கண்மாய் குளங்கள் நிரம்பியிருந்தது. இந்த கண்மாய்களில் தற்போது தண்ணீர் குறைந்துள்ளது.

கண்மாய்களில் மீன் குத்தகை விடாமல் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி யாரும் மீன்களை பிடித்துவிடாமல் பாதுகாப்பர். பாதுகாக்கப்பட்ட மீன்களை பிடிப்பதற்கு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மீன்பிடித்திருவிழா நடத்த நாள் குறித்து அக்கம் பக்கம் ஊரினருக்கு தகவல் தெரிவிப்பனர். இதனையடுத்து அதிகாலை நேரத்தில் மீன்பிடித்திருவிழா நடத்தப்படும். இதன் அடிப்பட்டியில் நேற்று தூத்தூர் ஊராட்சி மணப்பட்ட கிழஞ்சரன் கண்மாய் பிடித்திருவிழா நடந்தது. கண்மாய் கரையின் பின்புறம் சுவாமி வழிபாடு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய்க்கரையில் நின்று வௌ;ளை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கிவைத்தனர். வலை, தூரி, ஊத்தா போன்ற உபகரணங்கள் மூலம் பொதுமக்கள் மீன்பிடித்தனர்.

இதில் விரால், கெண்டை, அயிரை, சிலேப்பி போன்ற வகை மீன்கள் கிடைத்தன. இந்த மீன்பிடியில் மணப்பட்டி, தூத்தூர், ஆலவயல், கண்டியாநத்தம்,வலையபட்டி, மைலாப்பு+ர் உள்ளிட்ட புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த கண்மாய்களில் பிடித்த மீனை விற்பனை செய்யால் வீடுகளில் குழம்பு வைத்து உண்பர். மீன்படித்திருவிழா நடைபெறும் கிராமங்களில் மீன் மணம் வீசும்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்