பொன்னமராவதி வழியாக மதுரை ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை: வர்த்தகர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பொன்னமராவதி: பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் சேவை துவங்கப்படுமா என்று அப்பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். பொன்னமராவதியில் வர்த்தகர்கள், மற்றும் பொதுமக்கள் ரயில் சேவைக்கு மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று தான் ரயில் பிடிக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ரயிலை சுற்றுலா சென்று தான் பார்க்க வேண்டிய நிலையுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகரங்களில் பொன்னமராவதியும் ஒன்று. வர்த்தகர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் ரயில் சேவை இல்லாததால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு நீண்ட தூரம் சென்று ரயில் பயணம் செய்யவேண்டியுள்ளது. மேலும் சரக்கு ரயில் இருந்து எந்த பொருளும் நேரடியாக கொள்முதல் செய்து இங்கு கொண்டுவந்துவிடலாம். அது இல்லாமல் இருப்பதால் அதிக கட்டணம் கொடுத்து லாரி சர்வீசில் போட வேண்டியுள்ளது.

எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றார். இதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியாக மதுரைக்கும், திருச்சியில் இருந்து பொன்னமராவதி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!