பொன்முடி அமைச்சராக தகுதி உடையவர் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நல்ல குட்டு குட்டி இருக்கிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான குட்டை குட்டியுள்ளது. ஆனால் அவருக்கு வலிக்காது. ஏனென்றால் அவருக்கு இரும்பு தலையர் என்று பெயர். சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் பொன்முடி அமைச்சராக இருப்பதற்கு முழு தகுதி உள்ளவராக ஆகின்றார். அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவரை அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் சிறந்த மேதாவி. அதனால் சட்ட வல்லுநர்களிடம் இதை கேட்கிறேன். அதை கேட்கிறேன் என்று சொல்லி கடைசியாக முடியாது என்று மறுத்துள்ளார். அதற்கு உச்சநீதிமன்றம் நல்ல பதிலை தந்திருக்கிறது. நல்ல குட்டு குட்டி இருக்கிறது. உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரே நீதிமன்றம் சொல்வதை ஒப்புக்கொள்கிறார். ஆளுநர் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது. தேர்தல் காலத்தில் எவ்வளவு மோசமான ஆளுநர் இருக்கும்போது, இனி என்ன நடக்கும் என்பதையும் மக்கள் நிச்சயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!