அண்ணாமலைக்கு பொன்குமார் கேள்வி பெரியார் இல்லையெனில் ஐபிஎஸ் ஆகி இருக்க முடியுமா?

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பாஜ ஆட்சி அமைந்தால் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என ஆணவத்தின் உச்சிக்கு சென்று அண்ணாமலை பேசியுள்ளார். பெரியார் இல்லையெனில், இடஒதுக்கீடு ஏற்பட்டிருக்காவிட்டால் அண்ணாமலை போன்றவர்களால் ஐபிஎஸ் அதிகாரி ஆகி இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான கிரிமினல்களையும் பாஜவில் சேர்த்து பொறுப்பை வழங்கி, ஒன்றியத்தில் உள்ள ஆட்சியின் அதிகாரம், பண பலம் இவற்றை கொண்டு கட்சி நடத்தி வரும் அண்ணாமலைக்கு பெரியார் மண்ணின் உண்மையான கள நிலவரம் இன்னும் கணக்கிட முடியாதது அவலமாகும். இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ெபரியாரின் கருத்தியியல் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில் சமூக நீதியின் சின்னமாக விளங்கக்கூடிய பெரியாரின் சிலையை அகற்றுவேன் என்று கூறுவது ஆணவத்தின் உச்சம். உடனடியாக அண்ணாமலை இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்