பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசின் C மற்றும் D பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு

சென்னை: 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் C மற்றும் D பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்தது. அதன்படி,

1) சி மற்றும்‌ ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ரூபாய்‌ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.

2) தொகுப்பூதியம்‌, சிறப்புக்‌ கால முறை ஊதியம்‌ பெறும்‌ பணியாளர்கள்‌, மற்றும்‌ 2022-2023-ம்‌ நிதியாண்டில்‌ குறைந்தபட்சம்‌ 240 நாட்கள்‌ அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச்‌ செலவினத்தின்‌ கீழ்‌ மாத அடிப்படையில்‌ நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்‌ பெறும்‌ முழுநேர மற்றும்‌ பகுதி நேரப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு ரூபாய்‌: 1,000 சிறப்பு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.

3) “சி” மற்றும்‌ “டி” பிரிவைச்‌ சார்ந்த ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌. குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, முன்னாள்‌ கிராம பணியமைப்பு (முன்னாள்‌ கிராம அலுவலர்கள்‌, கிராம உதவியாளர்கள்‌) மற்றும்‌ அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்‌ ஆகியோருக்கும்‌ ரூபாய்‌ 500 பொங்கல்‌ பரிசாக வழங்கப்படும்‌.

மேற்கூறிய மிகை ஊதியம்‌/பொங்கல்‌ பறிசு வழங்குவதன்‌ மூலம்‌ அரசிற்கு 167 கோடியே 68 லட்சம்‌ ரூபாய்‌ செலவு ஏற்படும்‌.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’