பொங்கலை முன்னிட்டு விற்பனைக்கு வந்த மூங்கில் ஏணிகள்

திருப்புவனம் : தமிழகத்தின் பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூங்கில் ஏணிகள் திருப்புவனம் வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் வீடுகளை சுத்தம் செய்து சுண்ணாம்பு உள்ளிட்டவற்றால் புது வர்ணம் பூசி வீடுகளை அழகு படுத்துவார்கள். வீடுகளில் சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்க ஏணிகள் பயன்படுத்தப்படும்.

இதற்காக திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மூங்கில் மர ஏணிகள் செய்து திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். எட்டு அடி முதல் 20 அடி உயரம் ஏணி வரை விற்பனை செய்கின்றனர். இரும்பு மற்றும் அலுமினிய ஏணிகளை பயன்படுத்தும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் மூங்கில் ஏணிகளால் எந்தவித விபத்துகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஏணிகள் தயாரிக்கும் பிரசாந்த்கூறு கையில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்மூங்கில் மரங்கள் அதிகம். தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே மூங்கில் மரங்களை வெட்டி காய வைத்து ஏணிகள் தயாரிப்போம். அதனை சரக்கு வாகனங்களில் ஏற்தி ஊர் ஊராக சென்று அங்கு நடக்கும் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம். எட்டு அடி முதல் 20 அடி உயர ஏணி வரை விற்பனை செய்கிறோம். ஆயிரம் ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை ஏணிகள் விலை வைத்து விற்பனை செய்கிறோம். நகர்ப்புறங்களில் அதிகமாக ஏணிகள் விற்பனையாகும்.
ஒரு சரக்கு வாகனத்தில் அதிகபட்சமாக 50 முதல் 70 ஏணிகள் வரைஏற்றலாம் என்றார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்